search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய நீதித்துறை"

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவி ஓய்வு நிகழ்ச்சியில், உலகின் மிக வலுவான நீதித்துறை கொண்ட நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்துள்ளார். #DipakMisra #RanjanGogoi #SupremeCourt
    புதுடெல்லி:

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றுடன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவரது பணி ஓய்வை ஒட்டி, உச்சநீதிமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உலகில் பல்வேறு மிக சிக்கலான வழக்குகளையும் கையாளும் அளவுக்கு இந்திய நீதித்துறை மிக சக்தி வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



    வரலாறு சில நேரங்களில் கருணை மிகுந்ததாகவும், சில நேரங்களில் கருணையற்றதாகவும் இருந்திருக்க கூடும் என்றும், தான் எவரையும் அவரகளது வரலாறை வைத்து நிர்ணயிப்பது இல்லை, அப்போதைய அவர்களின் நடத்தையை கொண்டே முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் மிஸ்ரா ஒரு குறிப்பிடத்தக்க நீதிபதி எனவும், அவரது தீர்ப்புகளில் இருந்து அவரது சிறப்புமிக்க சேவை வெளிப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #DipakMisra #RanjanGogoi #SupremeCourt
    ×